தி.மலை: தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் விடுவிப்பு

72பார்த்தது
தி.மலை: தேர்தல் விதிமீறல் வழக்கில் அமைச்சர் விடுவிப்பு
செய்யாறு பகுதியில் 2011 சட்டப் பேரவைத் தேர்தலின்போது, நேரம் கடந்து பொதுக்கூட்டத்தை நடத்தி வாக்கு சேகரித்ததாக தற்போதைய பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ. வேலு மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக எ. வ. வேலு மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு திருவண்ணாமலை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று (ஜூன் 10) அமைச்சர் எ. வ. வேலு நீதிமன்றத்தில் ஆஜரானார். 

அப்போது, அரசு தரப்பில் முறையாக சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் எ. வ. வேலுவை விடுவித்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய விஷ்ணுபிரசாத் எம். பி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர். எ. வ. வே. கம்பன் தலைமையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி ஆகியோர் திமுக தொண்டர்களுடன் திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி