திருவண்ணாமலை: வணிக வளாக கட்டிட திறப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு

73பார்த்தது
திருவண்ணாமலை: வணிக வளாக கட்டிட திறப்பு விழா; அமைச்சர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியில் மாநில நிதிக்குழு மானியத் திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிறைவு வணிக வளாக கட்டிடத்தினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் த எஸ். அம்பேத்குமார் (வந்தவாசி), ஓ. ஜோதி (செய்யார்), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி