திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கொழம்பாடி கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்ற மாணவர் பிரபாகரன் (18) விபத்தில் காயமடைந்தார். அந்த வழியாக காரில் சென்ற எம்எல்ஏ ஒ. ஜோதி, காயமடைந்த மாணவரை மீட்டு தனது காரில் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர், பள்ளி ஆசிரியரை வரவழைத்து மாணவரை தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.