அங்கன்வாடி மையம், பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.

215பார்த்தது
அங்கன்வாடி மையம், பள்ளி கட்டடத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்த கீழ்நெல்லி திருவடிராயபுரம் கிராமத்தில், ஊராட்சித் துறை சார்பில் ரூ.17 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்டிடங்களை தொகுதி எம்.எல்.ஏ. ஒ. ஜோதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனுவாசன், வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலாளர் ஜேசிகே. சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ. ஜோதி கட்டிடங்களைத் திறந்து வைத்து இனிப்பு வழங்கிப் பேசினார்.

தொடர்புடைய செய்தி