செய்யாறு அருகே திருமணமாகி 7 மாதங்களே ஆன ஜீவலட்சுமி (18) என்ற புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கழுத்தில் தூக்குத் தடயமும், உடலில் காயங்களும் இருந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், வரதட்சணை கேட்டு கணவர் ஜீவானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி, ஜீவலட்சுமியின் உறவினர்கள் செய்யாறு அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.