செய்யாறு அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி கைப்பேசி மற்றும் பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 12-ஆம் தேதி இரவு பணிமுடித்து வீடு திரும்பிய ராஜ்குமார் (40) என்பவரை மேல்பூதேரி கூட்டுச்சாலை அருகே 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்கி, கைப்பேசி மற்றும் ரூ. 1,000-ஐ பறித்துச் சென்றது. புகாரின் பேரில் தனிப்படை விசாரணை நடத்தி, சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் தொடர்புடையவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.