மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சார்-ஆட்சியர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. நாராயணன் தலைமை வகித்தார். அமைப்பின் இணைச் செயலர் ஏ. முத்துமாரி, துணைத் தலைவர் எஸ். பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிவிப்பின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,759-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஈமக்கிரியை செலவு நிதி ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் செய்யாறு வட்டக் கிளை தலைவர் கே. வெங்கடேசன், அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் ஜே. கோவிந்தசாமி, கே. பூங்காவனம், என். சுசீலா, ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, துணைத் தலைவர் பஞ்சாட்சரம் வரவேற்றார். நிறைவில், மாவட்ட பொருளாளர் ஏ. எம். வேலாயுதம் நன்றி கூறினார்.