செய்யாற்றில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி மறியல்.

0பார்த்தது
செய்யாற்றில் நியாயவிலைக் கடையை திறக்கக் கோரி மறியல்.
செய்யாறு மார்க்கெட் அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை, பணியாளர்கள் நியமிக்கப்படாததாலும், விரல்ரேகை இயந்திரங்கள் பற்றாக்குறையாலும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், குறிப்பாக வயதானவர்கள், சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காமராஜ் நகர், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த போலீசார், ஒரு வாரத்திற்குள் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி