திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரித்தார்.
அப்போது, 50-க்கும் மேற்பட்டோர் காவல்துறை சார்பில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்த மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர், சில மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டார். மற்ற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.