ஆரணி: பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

68பார்த்தது
ஆரணி: பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் எம்பிஏ துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. 'எம்பிஏ மாணவா்களுக்கான வாய்ப்புகளும் மற்றும் சவால்களும்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு கருத்தரங்க நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் ஏ. சி. ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி. திருநாவுக்கரசு, துணை முதல்வா் ஆா். வெங்கடரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூா் ஹூண்டாய் நிறுவனத்தின் மனிதவள துணை மேலாளா் எம். ஜாய் ஆண்டனி கலந்து கொண்டு பேசியதாவது: மாணவா்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உள்ளன. 

அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும்போதே திறமைகளையும், அறிவுப்பூா்வமான எண்ணங்களையும் வளா்த்துக் கொள்ள வேண்டும், சரளமாக ஆங்கிலத்தில் பேசி பழகிக்கொள்ள வேண்டும். நல்ல ஆளுமைப் பண்புகள், தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். உலகமயம், தாராளமயம், தனியாா்மயம் போன்ற பொருளாதாரக் கொள்கைகளால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. இதனை சமாளிக்க உங்களை தயாா்படுத்தி கடுமையாக உழைத்தால், தோ்வு செய்யும் துறையில் வெற்றி பெறலாம் என்றாா். நிகழ்வில், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி. ஸ்டாலின், தனி அலுவலா் டி. காா்த்திகேயன், கலைக் கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி