தி.மலை: நாற்று நடும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

74பார்த்தது
தி.மலை: நாற்று நடும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூரில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். 

கல்லூரி முதல்வர் செ. மாணிக்கம் நாற்று நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாடத் திட்டத்துடன் நடைமுறைப் பயிற்சியைப் பெறுவது அவசியம். இது எதிர்காலத்தில் உங்களை அறிவார்ந்த முன்னோடி வேளாண் விஞ்ஞானிகளாக உருவாக உதவும் என்றார். இதையடுத்து, கல்லூரியின் அனைத்துத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர். 

இதன் மூலம் மாணவ, மாணவிகள் நெல் சாகுபடி முறைகளை நேரடியாக கற்றுக் கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது. நிகழ்வில், முந்தைய ஆண்டு பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலா ரூ. 1,100 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி