செய்யாறு-வந்தவாசி சாலையில் தென் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் 2024-25 ஆண்டுக்கான கரும்பு அரைவை தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, ஆலையின் செயலாளர் த. காமாட்சி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ. ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கரும்பு அரைவையை தொடங்கி வைத்தனர்.
நிகழாண்டில் 2,020 விவசாயிகள் பதிவு செய்த நிலையில், 6,103 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பை அரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.நிகழ்வில், திமுக நிர்வாகிகள் ஜேசிகே. சீனுவாசன், க. லோகநாதன், சி. கே. ரவிக்குமார், தென்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.