செய்யாறு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்.

0பார்த்தது
செய்யாறு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் கரும்பு அரைவை பணி தொடங்குவதாக ஆலையின் செயலாட்சியர் த. காமாட்சி தெரிவித்துள்ளார். நிகழாண்டு 1.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கரும்பு அரைவை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பாய்லர் இளம் சூடேற்றும் நிகழ்ச்சி ஆலையில் நடைபெற்றது. செயலாட்சியர் த. காமாட்சி பாய்லரில் தீ மூட்டி பணியை தொடங்கிவைத்தார்.

தொடர்புடைய செய்தி