தி. மலை: மூக்குபொடி சித்தா் நினைவிடத்தில் குரு பூஜை

11பார்த்தது
தி. மலை: மூக்குபொடி சித்தா் நினைவிடத்தில் குரு பூஜை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மூக்குபொடி சித்தர் நினைவிடத்தில் நடைபெற்ற 7-ஆம் ஆண்டு குரு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தரை தரிசனம் செய்தனர். 43 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த மூக்குபொடி சித்தர் 2018 டிசம்பரில் சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் மரணமடைந்தார். அவரது நினைவிடத்தில் நடைபெற்ற குரு பூஜையில் கணபதி பூஜை, குரு பூஜை, மகேஷ்வர பூஜை ஆகியவை நடைபெற்றன. பாஜக மாநில துணைத் தலைவர் கே. கோபால்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாதுகளுக்கு வஸ்திர தானம், சொர்ண தானம், அன்னதானம் வழங்கினார். பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அறக்கட்டளை நிறுவனர், நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி