தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம் எம்எல்ஏ பெருமிதம்.

0பார்த்தது
தன்னிறைவு பெற்ற வேளியநல்லூா் கிராமம் எம்எல்ஏ பெருமிதம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியம், வேளியநல்லூா் கிராமத்தில் ரூ. 2.67 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட இரு சாலைகள், நாடக மேடை, அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஒ. ஜோதி எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். கனிம வள நிதி, சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதி, அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆதி. சக்கரவா்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளியநல்லூா் கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக திகழ்கிறது என எம்எல்ஏ தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you