தி.மலை: அரசு மதுக்கடையில் 3 லட்சம் பணம் திருட்டு

69பார்த்தது
தி.மலை: அரசு மதுக்கடையில் 3 லட்சம் பணம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் உள்ள அரசு மதுக்கடையில் கடந்த திங்கள்கிழமை இரவு சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த ரூ. 3. 46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், வாகனச் சோதனையில் பிடிபட்ட விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சின்னலூா் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (வயது 35) என்பவரிடம் போலீஸாா் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் மாமண்டூா் அரசு மதுக் கடையில் பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்து அவரிடம் இருந்து மொத்த பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.