வந்தவாசியை அடுத்த ஓசூர் கிராமத்தில், விவசாயி சண்முகம் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, மின்கம்பங்களில் இருந்த மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இப்பகுதியில் மேலும் 3 மின்மாற்றிகள் உடைக்கப்பட்டுள்ளன. திருடப்பட்டவை போக, தேவையில்லாத பொருட்கள் விவசாய கிணற்றில் வீசப்பட்டுள்ளன. தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கீழ்கொடுங்காலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.