
திருவண்ணாமலை: பிஎம் கிசான் திட்டம்; இவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் 21வது தவணை தொகையான 2,000 ரூபாயை விவசாயிகள் பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.



























