தி.மலை: காதலி கொலை வழக்கில் காதலன் கைது

58பார்த்தது
தி.மலை: காதலி கொலை வழக்கில் காதலன் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி (21), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (29) என்பவரும் படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் பயிற்சி மையத்தில் இருந்து ரோஷினியும், சக்திவேலும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை சரமாரி தாக்கியுள்ளார். 

மேலும் அருகே உள்ள கிணற்றில் தள்ளியுள்ளார். இதையடுத்து சக்திவேல் நள்ளிரவு போளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர், போலீசாரிடம் 'நானும், ரோஷினி என்பவரும் காதலித்து வந்தோம். அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். இதனால் நான், ரோஷினியிடம் உடனே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினேன். ஆனால் ரோஷினி மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அவரை கன்னத்தில் அறைந்தேன். இதனால் ரோஷினி, அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி