திருவண்ணாமலை: திமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

51பார்த்தது
திருவண்ணாமலை: திமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக அலுவலகத்தில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர். எ. வ. வே. கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி