வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு.

468பார்த்தது
வந்தவாசி அருகே மொபெட் மீது லாரி மோதி விவசாயி உயிரிழப்பு.
வந்தவாசியை அடுத்த சூரியதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, தனது மனைவி, மகள், பேத்தியுடன் மொபெட்டில் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது, மருதாடு - ஓசூா் சாலை, மருதாடு புறவழிச் சாலை அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி தானாக நகர்ந்து மொபெட் மீது மோதியது. இதில் ஏழுமலை உயிரிழந்தார். மகள் சுஜாதா செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி