தி. மலையில் உள்ள செங்கம் ரோடு தாமரை நகர் மற்றும் அண்ணா நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வாடகை குடியிருப்புகள் உள்ளது.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல தரப்பினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி குடிநீர் தொட்டியில் குப்பைகள் மலை போல் குவிந்துள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகம். தற்போது குடி தண்ணீர் முறையாக வருவதில்லை. பணிக்கு செல்வோர் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.