திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (21.05.2026) பிற்பகல் 3 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலங்கட்டியுடன் கூடிய கனமழை பெய்தது. கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்தோடியதுடன், சில இடங்களில் மரங்கள் சாய்ந்ததால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மழையை வரவேற்றனர்.