திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பர்வத மலையில் பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயிலில் வரும் 3ம் தேதி கார்த்திகை மகா தீபம் நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கு சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு, பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை போலீஸ் பாதுகாப்பு, சிறப்பு மருத்துவ முகாம்கள், வனத்துறை சோதனை, மற்றும் பிளாஸ்டிக் தடை உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.