திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் நாள் பள்ளிக்கு சென்றனர். அவர்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் வரவேற்று அவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கலசப்பாக்கம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகர், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.