தி.மலை: பயணியர் நிழற்குடை, பேருந்தை துவக்கி வைத்த எம்எல்ஏ

58பார்த்தது
தி.மலை: பயணியர் நிழற்குடை, பேருந்தை துவக்கி வைத்த எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நயம்பாடி ஊராட்சிக்கு, புதிய பேருந்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் தொடங்கி வைத்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் சி. சுந்தரபாண்டியன், கி. ஆறுமுகம், கலசப்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் கா. சு. இளங்கோவன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி