திருவண்ணாமலை: வாகனங்களுக்கு இடைக்கடவுச் சீட்டு அவசியம்; ஆட்சியர்

63பார்த்தது
திருவண்ணாமலை: வாகனங்களுக்கு இடைக்கடவுச் சீட்டு அவசியம்; ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்புக் கிடங்கு அமைத்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, செயற்கை மணல் (எம். சாண்ட்) கொண்டு செல்ல இதுவரை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்திலேயே இடைக்கடவுச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.அதன்படி, ஜூன் 9 முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்யப்பட்ட கிரஷர் மற்றும் இருப்புக் கிடங்குகளில் இருந்து ஜல்லி கற்கள், செயற்கை மணல் (எம். சாண்ட்) ஆகியவற்றை கொண்டு செல்ல இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கப்படும் நடைச் சீட்டுகளின் அடிப்படையில் இடைக்கடவுச் சீட்டு இணைய தளம் வாயிலாக மட்டுமே வழங்கப்படும்.இனிவரும் காலங்களில் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து கனிமங்களும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு கனிம விற்பனை எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமையும். எனவே, அனைவரும் இணைய வழி இடைக் கடவுச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி