திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலசப்பாக்கத்தை அடுத்த சோழவரம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இராஜராஜசோழர் காலத்தில் நிறுவப்பட்ட கல்வெட்டு அருகாமையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உள்ள இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், இதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் கே. பரணி தலைமை வகித்தார். நகரச் செயலர் ரஞ்சித், மாவட்டக் குழு முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக் குழு சிவா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலர் எம். ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.