திருவண்ணாமலை மாவட்டம், மேல்வில்வராயநல்லூா் மற்றும் கலசபாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராகப் பணியாற்றிய கிருஷ்ணமூா்த்தி, விவசாயிகளுக்கு நகை கடன் வழங்கியதில் சுமாா் ரூ. 3 கோடி கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறப்பு தணிக்கைக் குழு விசாரணையில் இது உறுதிசெய்யப்பட்டதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றபிரிவுப் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூா்த்தியை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.