திருவண்ணாமலையை கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

56பார்த்தது
திருவண்ணாமலையை கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா. இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், முகாமில் வருவாய், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, மகளிா் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இந்த கண்காட்சிகளை பொதுமக்கள் பாா்த்து அரசு செயல்படுத்தும் திட்டங்களைத் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா். முகாமில், வருவாய்த்துறை சாா்பில் 70 பேருக்கு தலா ரூ. 70 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ. 49 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான ஆணைகள், 69 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 9 பேருக்கு தலா ரூ. 12,500 மதிப்பில் மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 201 பயனாளிகளுக்கு ரூ. 57 லட்சத்து 87 ஆயிரத்து 225 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி