வந்தவாசி அருகே சொரையூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ், தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் (47) பொன்னூர் கிராமத்தில் நடந்த உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வந்தவாசி-ஆரணி சாலையில் சென்றபோது, பைக்கின் பின்பக்க டயர் வெடித்ததில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஜெயஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.