திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் சி. நம்மியந்தல் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் கதிரவன் ஆலோசனைப்படி, மாவட்ட பொருளாளர் சுரேஷ் முன்னிலையில் தவெக நிர்வாகி மாதவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.