
ராஜந்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டம் ராஜந்தாங்கல் துணை மின் நிலையத்தில் நாளை (06.06.2026) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ராஜந்தாங்கல், கொளத்தூர், சாணிப்பூண்டி, கீழ்கரிப்பூர், அண்டம்பள்ளம், ஆனானந்தல், நாடழகானந்தல், கெங்கம்பட்டு, கோணலூர், செல்லங்குப்பம், காட்டுமலையனூர், பொலக்குணம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.




















