96. 34% தேர்ச்சியுடன் நகராட்சி பெண்கள் அரசு பள்ளி சாதனை

257பார்த்தது
96. 34% தேர்ச்சியுடன் நகராட்சி பெண்கள் அரசு பள்ளி சாதனை
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 656 மாணவிகள் தேர்வு எழுதியதில் 632 பேர் தேர்ச்சி பெற்று 96.34 சதவீதம் சாதனை படைத்தனர். மாணவிகள் D. தீபிகா மற்றும் R. தன்யா தலா 489 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தனர். G. முத்தரசி இரண்டாம் இடமும், J. லக்க்ஷனா மூன்றாம் இடமும் பெற்றனர். கணிதத்தில் ஒரு மாணவியும், அறிவியலில் நான்கு மாணவிகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 450-க்கு மேல் 55 பேரும், 400-க்கு மேல் 95 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி