திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரையின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, குண்டூர்–திருப்பதி ரயில் திருவண்ணாமலை வழியாக திருச்சி வரை இயக்கப்பட உள்ளது. மேலும், நரசப்பூர்–திருவண்ணாமலை மற்றும் சார்லபள்ளி வழித்தட ரயில்களையும் திருச்சி வரை நிரந்தரமாக நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் சேவைகள் பக்தர்களின் வருகையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.