திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி அதிமுக வடக்கு ஒன்றியம் வண்ணாங்குளம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் ஒன்றிய செயலாளர் கொளத்தூர் திருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் தி. மலை அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வரகூர் அருணாசலம் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். வண்ணாங்குளம் மற்றும் அழகுசேனை சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.