செங்கம்: பெங்களூரில் பதுங்கியவர் சிக்கினார்

384பார்த்தது
செங்கம்: பெங்களூரில் பதுங்கியவர் சிக்கினார்
செங்கம் அருகே வளையாபட்டு எம். ஜி. ஆர் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்த சுசீலா (60) என்பவர் வீட்டில் புகுந்த மர்ம நபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தில் இருந்த அரை சவரன் தங்க தாலியை பறித்து தப்பினார். இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த அஜய் (27) என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பெங்களூருவில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி