தண்டராம்பட்டு அருகே சாராயம் காய்ச்சிய தம்பதி கைது

330பார்த்தது
தண்டராம்பட்டு அருகே சாராயம் காய்ச்சிய தம்பதி கைது
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கண்டியாங்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தச்சம்பட்டு போலீசார் நடத்திய சோதனையில் 6 பேரல்களில் 650 லிட்டர் ஊறல் மற்றும் 20 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் 650 லிட்டர் ஊறலை அழித்து, 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சாராயம் காய்ச்சி விற்ற கணவன், மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி