திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

65பார்த்தது
திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பொதுவாக பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் கிரிவலம் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதே போல் விடுமுறை நாட்களிலும் கூட்டம் குவியும். இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடைமுறைப்படி காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 5 மணி நேரம் வரையில் காத்திருந்து அண்ணாமலையார் - உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்யும் பக்தர்கள், திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்கின்றனர். இந்நிலையில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும், இதனால், முதியவர்களும், குழந்தைகளும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர் எனவும் பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி