திருவண்ணாமலையில் மின்வெட்டால் பக்தர்கள் அவதி

126பார்த்தது
திருவண்ணாமலையில் மின்வெட்டால் பக்தர்கள் அவதி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், இரவு திடீரென ஏற்பட்ட மின்வெட்டால் கிரிவலப் பாதை இருளில் மூழ்கியது. டார்ச் லைட் வெளிச்சத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் சிரமத்துடன் கிரிவலம் சென்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், எதிரில் வருபவர்கள் கூட தெரியாததால் பக்தர்கள் அச்சத்துடனும் சிரமத்துடனும் கிரிவலம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி