திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் க. தா்பகராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா். கீரனூா் ஊராட்சி மன்ற அலுவலகம், கலைஞா் கனவு இல்லம், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், அரசுப் பள்ளி சுற்றுச்சூழல், கோணலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள், கோணலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன் மற்றும் உணவுத் தரம், நாடழகானந்தல் மற்றும் கோணலூா் ஊராட்சியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.