தி.மலை: அண்ணாமலையார் கோவிலில் புனித நீரால் பிராயசித்த பூஜை

82பார்த்தது
தி.மலை: அண்ணாமலையார் கோவிலில் புனித நீரால் பிராயசித்த பூஜை
திருவண்ணாமலை மாநகரில் உள்ள ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் முட்டை பிரியாணியுடன் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கிக் கொண்டு அண்ணாமலையார் கோவில் கோபுரத்திற்கு உள்ளே வந்து 5 ஆம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அந்த வழியாக வந்த நபர் பார்த்து அதிர்ச்சியடைந்து, கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசார் அவர்களை தடுத்து விசாரணைக்காக திருவண்ணாமலை மாநகர காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததுடன் மாநகர போலீசார் மாமிச உணவு சாப்பிட்ட தம்பதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கருவறையின் முன்பு சூரிய பகவான் அருகே புனித கலசங்கள் வைக்கப்பட்டு ஸ்தபன யாக பூஜை செய்யப்பட்டது, 

கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்தபன யாக பூஜை நிறைவடைந்த உடன் புனித நீர் திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் உள்ள ராஜகோபுரம், பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் தெளிக்கப்பட்டு பிராயசித்த பூஜை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி