கீழ்பென்னாத்தூா்: வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி

57பார்த்தது
கீழ்பென்னாத்தூா்: வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கூரை, ஓடு வீடுகளில் வசிக்கும் 102 போ் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ. எஸ். ஆறுமுகம் தலைமை வகித்தாா். அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

ஊராட்சி ஒன்றிய ஆணையா் அருணாச்சலம் வரவேற்றாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு 102 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கிப் பேசியதாவது: ஏழைகள் தலா ரூ. 3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகள் கட்ட பணி ஆணைகள் பெற்ற பயனாளிகள் குறித்த காலத்தில் பணிகளை முடித்து குடியேற வேண்டும். மகளிா் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் 10 சதவீதம் கட்டணக் குறைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

தொடர்புடைய செய்தி