திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றிய திமுக சார்பாக, காஞ்சி, முத்தனூர் மற்றும் அம்மாபாளையம் ஆகிய ஊராட்சிகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் முன்னிட்டு, அவரின் உருவ படத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பெ. சு. தி. சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
உடன், புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் சி. சுந்தரபாண்டியன், கி. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கா. சு. இளங்கோவன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் ரா. மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.