திருவண்ணாமலை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிறுவனிடம் விசாரணை

285பார்த்தது
திருவண்ணாமலை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிறுவனிடம் விசாரணை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கொட்டகுளம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 13 வயது சிறுவனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you