திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனக்காப்பில் வசிக்கும் புள்ளிமான், உணவு தேடி நகரப் பகுதிக்கு வந்தது. சனிக்கிழமை அதிகாலை பே கோபுர 11-ஆவது தெருவில் வந்த மானை 5-க்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி கடித்ததில், மானுக்கு கழுத்து மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காயமடைந்த மானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.