திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ. வேலுவை ஆதரித்து, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 8) காலை கள்ளக்கடை மூளை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மக்களிடம் அரசு சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி ஆதரவு கோரினார். இந்த பிரச்சாரத்தில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி மற்றும் திமுக, தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.