தி.மலை: அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

150பார்த்தது
தி.மலை: அண்ணாமலையார் கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று (டிச.3) அதிகாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, நடிகை ரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மெகா கொப்பரையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தன்று மலைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களில் 600 கிலோ நெய், 10 கிலோ கற்பூரம், 1,500 மீட்டர் பருத்தித் துணி (திரியாக) மற்றும் 15 அடி நீள மூங்கில் தடி ஆகியவை அடங்கும்.

தொடர்புடைய செய்தி