தி. மலை: 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம்.

30பார்த்தது
தி. மலை: 3000 ஆண்டு பழமையான பாறை ஓவியம்.
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் ஆய்வாளர்கள் பெரும்பாக்கம் - செ. அகரம் கிராம காட்டுப்பகுதியில் இரண்டு இடங்களில் பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். செஞ்சாந்து நிறத்திலும் வெண்சாந்து நிறத்திலும் காணப்படும் இந்த ஓவியங்களில் விலங்குகள், மனித உருவங்கள் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவக்கல் பாறை முகப்பில் மனித உருவங்கள், பன்றி, பல்லி போன்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி