மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் முன் உலக நன்மைக்காக 108 நாகஸ்வர கலைஞர்கள் மற்றும் 108 தவில் கலைஞர்கள் பங்கேற்ற 24 மணி நேர சிறப்பு இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 5 மணி வரை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாகஸ்வரம், தவில் இசை சங்கம் சார்பில் 45-ஆம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், தமிழக அரசு விருது பெற்ற கலை இளமணிகள் டி.ஆர்.பி.கே.ஆருரன், டி.ஆர்.பி.கே.நித்யானந்தம் ஆகியோர் மங்கள இசையுடன் விழா தொடங்கியது.